சங்க இலக்கியங்களில் பாரியும், பறம்பு நாட்டின் சிறப்பும்
Pari in Sangam Literature and Specialty of Parambu Naadu
ஐந்திலக்கண நூல்களில் செவிலித்தாய்க் கூற்றுக்கள்
Role of Foster Mothers in Ainthilakkanam
மகளிரிரும் பல்துறைகளும்
Women in Multiple Fields: A Review
புறநானூற்றில் வாழ்வியல் நெறி
Life Ethics in Puranaanuru
சூரசம்ஹார விழாவும் வாழ்வியல் நெறிமுறைகளும்
Soorasamhara Festival and Ethics of Life
பெரியாரின் சிந்தனைகளும் இக்கால பெண்களும்
Periyar's Thoughts and Contemporary Women
ஆயர்களின் தொழில்சார் வாழ்வியலும் உணவுப் பழக்க வழக்கங்களும்
Professional Life of Shepherds and their Dietary Habits
சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலில் விழாக்கள்
Festivals in the Life of Sangam Tamils
இருளர் வாழ்வும் இன வரைவியலும்
Irular and Ethnography
புறநானூற்றில் அசைவுயிர் வளர்ப்பும் பயன்பாடும்
Farming of Various Animals and their Utilization in Puranaanuru
பன்னிரண்டு திருக்குறள் அகராதிகளில் ஐம்புலன்கள்
Five Senses in Twelve Thirukkural Dictionaries
பரிபாடல் உணர்த்தும் இசையொலிகள்
The Musical Sounds Conveyed by Paripadal
காலாபாணி நாவலில் நம்பிக்கைகளும் சடங்குகளும்
Beliefs and Rituals in the Kalapani Novel
திருக்குறளில் உணவுப் பண்பாடு
Food Culture in Thirukkural
பன்னோக்கு பார்வையில் குறுந்தொகை
Kurunthogai in Perspective
திருக்கோவையாரில் அறத்தொடு நிற்றல்
Arathodu Nittral in Thirukkovaiyar
இருளர் வாழ்வும் இன வரைவியலும்
Irular and Ethnography
சங்க இலக்கியங்களில் பாரியும், பறம்பு நாட்டின் சிறப்பும்
Pari in Sangam Literature and Specialty of Parambu Naadu
மகளிரிரும் பல்துறைகளும்
Women in Multiple Fields: A Review
திருக்கோவையாரில் அறத்தொடு நிற்றல்
Arathodu Nittral in Thirukkovaiyar
புறநானூறு - பொருண்மொழிக் காஞ்சித்துறை உணர்த்தும் அறச் சிந்தனைகள்
Purananooru - Moral Thoughts Expressed by Porunmozhi Kanjithurai
தமிழகத்தின் பல பகுதிகளையும் கடையெழு வள்ளல்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவரான பாரியின் சிறப்புகளையும், வள்ளல் தன்மையினையும், புலவர்களை போற்றிய மாண்பினையும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பாரிக்கு கலைகளின் மீது இருந்த பற்றினையும், இவரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளையும், பாரியின் மிக நெருங்கிய நண்பரான புலவர் கபிலர் சார்ந்த செய்திகளையும், பறம்பு நாட்டின் அமைவிடத்தையும், இலக்கியங்களில் பாரி பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள இவ்வாய்வு கட்டுரை துணைபுரிகின்றது.
Many regions of Tamil Nadu were ruled by great philanthropic kings. This study explores the virtues of one such ruler, Pari, highlighting his generosity, patronage of poets, and noble qualities. Additionally, it delves into his deep appreciation for the arts, the regions under his rule, his close friendship with the poet Kapilar, the geographical location of Parambu Nadu, and literary references about Pari. This research article serves as a valuable resource in understanding these aspects.
நற்றாயின் உடல்நலம் பேணுவதிலும், பாலூட்டும் கால கட்டத்திலும் தாய்ப்பாலைத் தவிர்க்க வேண்டியும், குழந்தையைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டிய சூழ்நிலையிலும் இவற்றில் ஒன்றின் காரணமாய் வளர்ப்புத்தாய் முறை ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் வளர்ப்புத்தாய்க்கும் குழந்தைக்கும் அதிக நெருக்கம் உண்டானதால் இலக்கண நூலாசிரியர்கள் 'செவிலி' என்னும் சொல்லைத் தாயுடன் இணைத்துக் கொண்டனர். செவிலி தலைவியை வளர்ப்பதில் அன்பையும், கடமையுணர்ச்சியையும் செவிலித்தாய் காட்டுகிறாள். ஐந்திலக்கண நூல்கள் மற்றும் சங்க இலக்கியங்களிலும் செவிலித்தாய் குறித்த செய்திகள் பற்றிய குறிப்புகளை இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகின்றது.
In Sangam literature, the term 'Sevili' refers to a woman who serves as a confidante and advisor to the heroine, known as 'Thalaivi'. The Sevili plays a crucial role in guiding the heroine through various emotional and social situations, often providing counsel and support. The relationship between the heroine and the Sevili is characterized by deep trust and intimacy. The Sevili is privy to the heroine's innermost feelings and secrets, and her advice is highly valued. This dynamic is evident in several Sangam texts, where the Sevili's counsel significantly influences the heroine's decisions and actions.
மனித இனத்தின் ஒரு பாதியான பெண்ணினம் அதன் மறுபாதியான ஆணினத்தால் இன்று வரை சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் அடிமைப்பட்டு கிடப்பது என்பது ஓர் உலகளாவிய நிலையே! பெண்ணினம் தனது இயற்கையான தன்மைகளை மறந்து ஆணினத்தின் அதிகாரப் போக்கிற்கு அஞ்சி, அடங்கி நடக்க கட்டாயப்படுத்தப்பட்டாலும் பெண்ணினமானது "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போச்சு" என்ற கூற்றுக்கு ஏற்ப சமையலறையிலிருந்து வெளியேறி தங்களது தடைகளை தகர்த்தெறிந்து, ஆண்களுக்கே உரியது என்று முத்திரை குத்தப்பட்ட அனைத்து துறைகளிலும் அவர்கள் பங்களிப்பை ஆற்றி வருவதை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
It is a global reality that one half of humanity, women, continues to be enslaved in various social strata by the other half, men. Even if women are forced to forget their natural qualities and act submissively due to the authoritative behavior of men, the paper is structured to explain how women have been contributing in all areas, which were traditionally considered exclusive to men, by breaking their barriers and stepping out of the kitchen, in line with the saying "Kanmoodi Valakkamellam Manmoodi Pocchu".
பண்டையக்காலத் தமிழர்கள் காதலையும், வீரத்தையும் போற்றினர். மனிதன் தான் வாழும் நிலத்திற்கு ஏற்பத் தொழில்களை வடிவமைத்துக்கொண்டான். ஐந்நிலங்களை அமைத்துக்கொண்டு அவற்றிற்கேற்ப அவர்கள் வாழ்க்கையை அமைத்து ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு நெறிகளே வாழ்வியல் மரபாக கொண்டு இயல்பாக வாழத் தொடங்கினான். இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் மரபுகளுக்குத் தக்கவாறு மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். இவ்வாழ்வியல் மரபுகள் புறநானூற்றில் பல இடங்களில் காணப்படுகிறது.
Ancient Tamils revered both love and valor. They structured their occupations according to the lands they inhabited, dividing them into five distinct regions. Their lifestyles were organized based on these regions, adhering to ethical and cultural norms that became traditional ways of life. Literary works reflect that individuals shaped their lives in accordance with these traditions. These cultural practices are evident in many parts of the Purananuru.
கந்த சஷ்டி (சூரசம்ஹார) விழாவும் வாழ்வியல் நெறிகளும் என்ற தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலம் அகற்றல், பகைவனே ஆனாலும் உயிர்வதை கூடாது என்ற கருத்தை முன்மொழிகிறது. விரதம் என்னும் வழியில் உடலோம்பல், மற்றும் திருமணம் எனும் பந்தம் முதலான நெறிமுறைகளை ஆய்வுக்கட்டுரையானது விளக்குகின்றது. மேலும் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் சிறப்பு இயல்புகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.
This paper, titled "Kanda Sashti (Surasamharam) Festival and Life Principles," delves into the themes of eradicating the three impurities—ego, karma, and illusion—and emphasizes the principle that even adversaries should not be harmed. It discusses physical well-being through fasting and the ethical frameworks surrounding the bond of marriage. Additionally, the article highlights the unique characteristics of Lord Murugan, revered as the Tamil deity.
பெண்களின் நிலையையும், பெண்ணுரிமை வேண்டியும், பெண்களின் கல்வியறிவு, ஆண், பெண் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் பெரியாரின் சிந்தைகளையும், இன்றைய பெண்களின் நிலையும், பெரியாரின் கருத்துக்கள் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்துள்ளனவா என்பதை பற்றியதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
This paper focuses on the status of women, the advocacy for women's rights, and the perspectives of Periyar on issues such as women's education and gender equality. It also examines the current condition of women and assesses the extent to which Periyar's views have been disseminated and embraced by society.
காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள் ஆயர்கள். இவர்கள் அன்றாட வாழ்க்கை முறையிலும் பழக்க வழக்கத்திலும் சீரிய நுட்பத்தோடு வாழ்ந்துள்ளனர். அவ்வாழ்வியலை எடுத்துரைக்கும் நோக்கில் ஆயர்களின் தொழில்சார் வாழ்வியலும் உணவுப் பழக்க வழக்கங்களும் என்னும் தலைப்பில் ஆய்வதாக இவ்ஆய்வு அமைகிறது.
This research focuses on the Ayars, who inhabited the Mullai region—forested areas rich in lakes, waterfalls, and valuable trees like teak, bamboo, and sandalwood. The Ayars were primarily engaged in cattle herding and dairy farming, structuring their daily lives and customs with remarkable intricacy. This study aims to elucidate their occupational lifestyle and dietary habits.
சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் மக்கள் சிறுசிறு குடிகளாக வாழ்ந்தபோது விழாக்கள் நடைபெற்றிருக்க வேண்டும். அதுபற்றி தொல் பழங்கால ஒவியங்களில் சில காட்சிகள் வரையப்பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் கூறப்பெறும் குரவைக்கூத்து, வரிக்கூத்து, நடனங்கள், தொல் பழங்கால ஓவியத்தில் வரையப்பெற்று காணப்படுகின்றது. இவை பற்றிய கருத்துக்களை வெறும் யூகமாகக் கொள்ள முடியுமே தவிர, உறுதியான கருத்துக்களாகக் கொள்ள இயலாது. விழா என்பது ஓர் ஆண்டின் சமூக வாழ்வின் உச்சகட்ட வெளிப்பாடு, அல்லது சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய விழாவிற்குப் பின் ஏற்பட்டுள்ள சமூக, சமய வாழ்வுக்கான உச்சகட்ட வெளிப்பாடு, அல்லது எப்போதும் இல்லாத அளவிற்குச் சமூக வாழ்க்கையில் ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடியைச் சமாளிக்க உருவான கூட்டு நடவடிக்கையின் வெளிப்பாடே விழாவாகும். மனிதனின் வாழ்க்கைச் சுழற்சியில் பிறப்பு, இறப்பு போன்ற மிகப்பெரும் தனி மனித நெருக்கடியைச் சமாளிக்கச் செய்யும் செயலே சடங்காகும். சமூகத்தில் நெருக்கடி வரும்போதெல்லாம் கூட்டு வாழ்க்கையைப் புதுப்பிப்பதே விழா என கூறப்படுகின்றது.
சங்ககாலத்தில் பல விழாக்கள் நடைபெற்றன. அவற்றில் சில தேசிய விழாக்கள்; பல உள்ளூர் விழாக்கள். பொதுவாக விழவு என்றும், விழா என்றும் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் போது அவற்றை சிறு குடிவிழாக்காளாகவே கொள்ள முடிகின்றது. விழா என்று பொதுவாகக் கூறும்போது அன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவைக் குறிப்பிடவில்லை. விழித்திருந்து பார்த்தால் விழா என்று பெயர் பெற்றது என்பர். விழாக்கள் பெரும்பாலும் நிறைமதி நாளிலே கொண்டாப்பட்டது. விழா நேரத்தில் மக்கள் உறங்காமலிருந்தனர். மேலும் நீர் விழா, முந்நீர் விழா, பூந்தொடை விழா, உள்ளி விழா, பங்குனி முயக்கம், நெடுவேள் விழா, திருமால் விழா, காமவேள் விழா, இந்திர விழா, ஓண விழா, சுடர் விழா, வேனில் விழா (பல் பூவிழா) எனப் பல விழாக்கள் சங்க காலத்தமிழர்களின் வாழ்வியலைப் வெளிப்படுத்துவதாக அமைகின்றது. அவ்விழாக்களின் மூலம் சங்ககால மக்களின் சிறப்பான வாழ்வியல் கூறுகளைப் பற்றி விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
In ancient times, when people lived in small communities, festivals were likely held to mark significant events. Evidence of such celebrations can be found in ancient cave paintings depicting various scenes. Sangam literature references dances like Kuravai Koothu and Vari Koothu, which are also illustrated in these ancient artworks. While interpretations of these depictions are often speculative, they provide insights into early cultural practices. A festival represents the pinnacle of a community's social life, reflecting either the culmination of annual societal and religious activities or a collective response to significant social crises. In an individual's life, rituals associated with major events like birth and death serve to manage personal transitions. Similarly, in society, festivals function as communal activities designed to renew and revitalize collective life, especially during times of stress or change.
During the Sangam period, numerous festivals were celebrated, encompassing both regional and local events. In Sangam literature, terms like “vizhavu” and “vizha” often refer to small community festivals. The term “vizha” does not denote a specific grand festival of that era in Tamil Nadu. It is said that people remained awake during festivals, and many were held on full moon days. The festivals mentioned—Neer Vizha, Munneer Vizha, Poontodai Vizha, Ulli Vizha, Pankuni Muyakkam, Neduveal Vizha, Tirumaal Vizha, Kaamaveal Vizha, Indira Vizha, Ona Vizha, Sudar Vizha, and Venil Vizha (Pal Poovizha)—reflect the cultural and social life of the Sangam-era Tamils. This paper describes the unique lifestyle elements of the Sangam period people through these festivals.
இருளர் வாழ்வும் இனவரைவியலும் எனும் இக்கட்டுரை இருளர் இன மக்களின் வாழ்வியல் நிலைகளையும், அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் இனவரைவியல்தரவுகளை ஆராய்வதாகவும், இருளர் என்னதான் படித்து உயர்ந்த நிலைக்கு சென்றாலும் தங்களின் முன்னோர்களின் பண்பாட்டிலேயே உறுதியாக உள்ளனர் என்னும் செய்தியையும்,ஒருவேளை உணவிற்காக துன்பப்பட்டு இவர்கள் இன்று ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதையும் எடுத்துரைக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
This paper, titled "Irular and Ethnography", examines the living conditions of the Irula community, exploring ethnographic data from birth to death. It highlights that, despite achieving higher education and improved status, the Irula remain firmly rooted in their ancestral culture. The article also discusses how the community has made some progress, alleviating past struggles for basic necessities like food.
சங்ககால மனிதன் பல வகையான விலங்கினங்களை தனது வீட்டு பயன்பாட்டிற்காகவும், உணவு தேவைக்காகவும், போருக்காகவும், வேளாண் தொழில் செய்வது என பல்வேறு விதங்களில் அவை அவனுக்கு பயன்பட்டிருந்தாலும் அவற்றின் மீதுள்ள அன்பு மட்டுமே அவற்றை வளர்க்க காரணம் இல்லை. தன் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தியுள்ளான்.
In the Sangam period, humans utilized various animals for domestic purposes, food, warfare, and agriculture. However, the primary reason for their cultivation was not affection but their utility as tools to fulfill human needs.
சமூக வரலாற்றையும் மொழி வரலாற்றையும் அறிய இலக்கியங்கள் பயன்படுகின்றன. மொழியின் இலக்கண ஒழுங்கை அறிய இலக்கணங்கள் பயன்படுகின்றன. அதுபோல சொற்பொருளை அறிய உதவும் அகராதிகள், இவ்விரண்டையும் விளக்கிக் கொள்வதற்கான கருவிநூல்களாகச் செயல்படுகின்றன. வா. மார்க்கசகாயஞ் செட்டியார் தொடங்கி (1924), ச.வே. சுப்பிரமணியன் (2007) வரை பன்னிரண்டு திருக்குறள் அகராதிகள் வெளிவந்துள்ளன. அவ்வகராதிகளில் மெய் குறித்து 11 இடங்களிலும், வாய் குறித்து 5 இடங்களிலும், கண் குறித்து 73 இடங்களிலும், மூக்கு குறித்து 3 இடங்களிலும், செவி குறித்து 11 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் ஐம்புலன்கள் குறித்து 103 இடங்களில் 12 திருக்குறள் அகராதிகளில் இடம்பெற்றுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் ஆராயப்பட்டுள்ளது.
Literary works serve as valuable tools for understanding both social and linguistic histories. Grammar texts help in comprehending the structure of a language, while dictionaries assist in grasping word meanings. In this context, Thirukkural dictionaries have been instrumental in elucidating the significance of sensory organs in Tamil literature. Since the publication of the first Thirukkural dictionary by V. Markkachakayan Chettiar in 1924, and up to the work of S. V. Subramanian in 2007, twelve Thirukkural dictionaries have been released. These dictionaries have highlighted the importance of sensory organs in Thirukkural, with references to body appearing 11 times, mouth 5 times, eye 73 times, nose 3 times, and ear 11 times. In total, all five senses are mentioned 103 times across these twelve Thirukkural dictionaries.