மனித இனத்தின் ஒரு பாதியான பெண்ணினம் அதன் மறுபாதியான ஆணினத்தால் இன்று வரை சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் அடிமைப்பட்டு கிடப்பது என்பது ஓர் உலகளாவிய நிலையே! பெண்ணினம் தனது இயற்கையான தன்மைகளை மறந்து ஆணினத்தின் அதிகாரப் போக்கிற்கு அஞ்சி, அடங்கி நடக்க கட்டாயப்படுத்தப்பட்டாலும் பெண்ணினமானது "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போச்சு" என்ற கூற்றுக்கு ஏற்ப சமையலறையிலிருந்து வெளியேறி தங்களது தடைகளை தகர்த்தெறிந்து, ஆண்களுக்கே உரியது என்று முத்திரை குத்தப்பட்ட அனைத்து துறைகளிலும் அவர்கள் பங்களிப்பை ஆற்றி வருவதை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
It is a global reality that one half of humanity, women, continues to be enslaved in various social strata by the other half, men. Even if women are forced to forget their natural qualities and act submissively due to the authoritative behavior of men, the paper is structured to explain how women have been contributing in all areas, which were traditionally considered exclusive to men, by breaking their barriers and stepping out of the kitchen, in line with the saying "Kanmoodi Valakkamellam Manmoodi Pocchu".