i-manager's Ponni Nadhi (JPON)


Current Issue Vol. 1 Issue 1

Volume 1 Issue 1 January - June 2024

கட்டுரைகள்

பாட்டும் தொகையும் கூறும் வணிகமும் பெண்களும்
Trade and Women in Paattum Thogaiyum

Dr. G. Nageshwari*
தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியை, தெ.தி. இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.
நாகேஸ்வரி, க. (2024). பாட்டும் தொகையும் கூறும் வணிகமும் பெண்களும். பொன்னி நதி, 1(1), 1-3.

Abstract

ஒரு நாட்டின் வளர்ச்சி நிலைக்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரமாகும். அத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது வாணிகம். வாணிகத்தின் வளர்ச்சி நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு மக்களின் வளமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்நிலை சங்க காலம் முதல் இன்றைய காலம் வரை தொடர்ந்து வருகின்றது. இச்சங்க இலக்கியங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு வணிகத்தின் பங்களிப்பினையும், வணிகத்துறையில் பெண்களின் தனித்தன்மையையும் பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றது. வணிகத்தில் ஆண்கள் ஈடுபட்ட சூழலைப் போன்று பெண்களும் இடம் பெற்று வணிகர்களாக மேற்கொண்ட பண்டமாற்று நிலையினை எடுத்துக்கூறுகின்றது.

The basis of a country's level of development is the economy. Trade is the bedrock of such economic growth. The development of commerce is the basis for the prosperous life of the people which gives birth to the industrial development of the country. This situation continues from the Sangam period to the present day. The contribution of business to economic development and the uniqueness of women in the business sector are pointed out in many places in the association literature. Similar to the context in which men were engaged in business, women also took place as traders and described the barter situation.

ஆய்வுக் கட்டுரைகள்

காலாபாணி நாவலில் நம்பிக்கைகளும் சடங்குகளும்
Beliefs and Rituals in the Kalapani Novel

து. அனிதா* , க.நாகேஸ்வரி**
*முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் கலை ஆய்வகம், தெ.தி.இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.
**உதவி பேராசிரியர், தமிழ் கலை ஆய்வகம், தெ.தி.இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.
அனிதா, து., மற்றும் நாகேஸ்வரி, க. (2024). காலாபாணி நாவலில் நம்பிக்கைகளும் சடங்குகளும். பொன்னி நதி, 1(1), 38-41.

Abstract

இந்திய சுதந்திரப் போராட்ட எழுச்சியை நினைவு கூறும் நாவல் காலாபாணி.இந்நாவலில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் கடைப்பிடித்த நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை முன்னெடுத்து இருவேறு கூறுகளாக பிரித்து எடுத்துரைப்பது இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாகும். நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகிய இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக காணப்படுகின்றது. நம்பிக்கை மற்றும் சடங்கு என்பது மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையது. அவை முறையே பிரம்மஹத்தி தோஷம் என்பது மனிதர்களை தாக்குகின்ற சூழல்களையும், மக்கள் தாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருளின் மேல் சத்தியம் செய்து அதனை மீறாமல் கடைபிடிக்கும் நிகழ்வினையும், தெய்வத்தை வழிபடும் நிலையில் நல்ல நிமித்தம் பார்க்கப்படும் நிகழ்வு, இறைவனை மதம் சார்ந்து வழிபட்ட முறைகள், திருமணத்தின் முன்பு நிகழ்த்தப்படும் நிகழ்வு, பேய்களை விரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மந்திர உத்திகள் மற்றும் மனித வாழ்வில் ஜோதிட கலைக்கான முக்கியத்துவம் என பல்வேறுப்பட்ட கருத்துக்கள் நாவலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அத்தகைய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை எடுத்துரைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

"Kalapani" is a novel that commemorates the rise of the Indian freedom struggle. The purpose of this review is to highlight the beliefs and rituals practiced by the people of that time as depicted in the novel and categorize them into two distinct elements. Beliefs and rituals are closely intertwined in the narrative. Faith and ritual play significant roles in people's lives. They include rituals such as Brahmahathi Dosha, which affect people's circumstances; pledges made on everyday items and honored without fail; auspicious events observed during deity worship; religious methods of worship; pre-marriage ceremonies; magical practices against demons; and various perspectives on the significance of astrology. This review aims to emphasize such beliefs and rituals depicted in the novel.

ஒப்பீட்டு கட்டுரைகள்

ஒப்பியல் நோக்கில் கம்பராமாயணமும் தக்கைராமாயணமும்
Kambaramayanam and Thakhairamayanam in Comparative Perspective

சு. சதீக்ஷ்குமார்*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641 029.
சதீக்ஷ்குமார், சு. (2024). ஒப்பியல் நோக்கில் கம்பராமாயணமும் தக்கைராமாயணமும். பொன்னி நதி, 1(1), 42-47.

Abstract

தமிழில் தோன்றிய காப்பியங்களில் சிறப்பும் பெருமையும் பெற்ற நூலாகக் கம்பராமாயணம் திகழ்கின்றது. விருத்தம் என்னும் ஒண்பாவில் இராமகாதையைப் படைத்தளித்த கம்பனைப் போல கொங்குநாட்டில் தோன்றிய எம்பெருமான் கவிராயர் என்னும் புலவர் தக்கை என்னும் இசைக் கருவியை இசைத்துப் பாடும் வகையில் இராமாயணத்தை இயற்றியுள்ளார். இந்நூல் தக்கைராமாயணம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கம்பராமாயணத்தை ஆழ்ந்து பயின்று, நினைத்து நினைத்து உருகித் திளைத்ததால் விளைந்த பரவசத்தை, இன்ப அனுபவத்தைப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் நாட்டுப் பாடல்களாய் மாற்றிக் கொடுத்துள்ளார் எம்பெருமான் கவிராயர் என்பார். இவ்விரண்டு நூல்களின் பாடுபொருள் ஒன்றாகவே இருப்பினும் பல இடங்களில் கம்பரைத் தழுவியும் சில இடங்களில் கம்பராமாயணத்திலிருந்து வேறுபட்டும் தக்கைராமாயணத்தை எம்பெருமான் கவிராயர் பாடியுள்ளார். அவ்வகையில் எம்பெருமானார் ஒத்தும் வேறுபட்டும் செல்லும் இடங்களை ஆய்ந்துரைக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

"Kamba Ramayanam" is one of the most famous books in Tamil literature. Emperuman Kavirayar, who appeared in Kongunadu like Kampan, composed the Ramayana in a poetic form known as "Virutham," intended to be sung accompanied by a musical instrument called Bulavar Takkai. This version is famously known as "Thakai Ramayanam." Emperuman Kavirayar translated the ecstasy and joy of the Kamba Ramayanam into folk songs so that even the common man could comprehend it. Thakai Ramayanam differs from Kamba Ramayanam in various aspects. This article aims to explore both the similarities and differences in the narrative where Emperumanar diverges from Kampan's work.

ஒப்பீட்டு கட்டுரைகள்

ஆபிரகாம் மாஸ்லோவின் தேவைப் படிநிலைக் கோட்பாட்டு நோக்கில் கி.ரா.வின் கதவு சிறுகதை
K.R.'s ‘Kathavu’ Short Story towards Abraham Maslow's Hierarchy of Needs Theory

உ. ச. எ. தமிழரசன்*
உதவிப்பேராசிரியர், இளநிலைத் தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
தமிழரசன், உ. ச. எ. (2024). ஆபிரகாம் மாஸ்லோவின் தேவைப் படிநிலைக் கோட்பாட்டு நோக்கில் கி.ரா.வின் கதவு சிறுகதை. பொன்னி நதி, 1(1), 48-50.

Abstract

ஆபிரகாம் மாஸ்லோ ஒரு சமூக உளவியலாளர் ஆவார். ஆபிரகாம் மாஸ்லோ உயிர்களின் ஆளுமையோடு தொடர்புடைய தேவை நிறைவுக் கோட்பாட்டை உருவாக்கினார். மனித உயிர்களின் ஆளுமை என்பது மனிதர்களின் உடல் உள்ளம் மற்றும் சமூகத் தேவைகள் நிறைவேறுவதைச் சார்ந்து அமைவதாக மாஸ்லோ கருதினார். அவ்வகையில் ஆபிரகாம் மாஸ்லோவின் தேவை நிறைவுக் கோட்பாட்டுச் சிந்தனைகளை கி.ராஜநாராயணனின் ‘கதவு’ சிறுகதையோடு ஒப்பிட்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Abraham Maslow is a social psychologist. Abraham Maslow developed the need fulfillment theory related to the personality of living beings. Maslow believed that the personality of human beings depends on the fulfillment of their physical and social needs. In this way, this article compares Abraham Maslow's need fulfillment theory with K. Rajanarayanan's short story 'Kathavu'.

கட்டுரைகள்

புறநானூறு - பொருண்மொழிக் காஞ்சித்துறை உணர்த்தும் அறச் சிந்தனைகள்
Purananooru - Moral Thoughts Expressed by Porunmozhi Kanjithurai

ம. ஆன்றனி ஜெலஸ்டின் செல்வராஜ்* , க. நாகேஸ்வரி**
*பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்க் கலை ஆய்வு மையம், தெ.தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
**உதவிப் பேராசிரியர், தமிழ்க் கலை ஆய்வு மையம், தெ.தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
செல்வராஜ், ம. ஆ. ஜெ., மற்றும் நாகேஸ்வரி, க. (2024). புறநானூறு - பொருண்மொழிக் காஞ்சித்துறை உணர்த்தும் அறச் சிந்தனைகள். பொன்னி நதி, 1(1), 4-10.

Abstract

நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ள அறச்சிந்தனைகள் என்றுமே வாழ்வில் நற்சிந்தனைகளைத் தந்து, மனிதம் மிகுந்த மானிட சமுகம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் சங்க இலக்கியத்தின் கருவூலமாகத் திகழும் புறநானூற்றுப் பாடல்களில் பொதுவியல் திணையில் மன்னர் மற்றும் மக்களுக்காகக் கூறப்பட்டுள்ள பதினேழு பொருண்மொழிக் காஞ்சித்துறை பாடல்களுள் மக்களுக்காகக் கூறப்பட்டுள்ள பதினொரு அறச்சிந்தனை பாடல்களில் ஆறு பாடல்களை ஆய்வு செய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.

The purpose of this review article is to analyze six of the eleven songs written for the people, out of the seventeen songs written for the king and the people in the Department of General Studies. These songs are among the four hundred songs in Purananooru, a treasury of Sangha literature. The aim is to foster a humane society by imparting good thoughts and values through these songs.

கட்டுரைகள்

இலக்கியங்கள் உணர்த்தும் அறம்
Virtue that Literature Conveys

அ. பொன்னம்மாள்*
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை உயராய்வு மையம், தெ.தி.இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.
பொன்னம்மாள், அ. (2024). இலக்கியங்கள் உணர்த்தும் அறம். பொன்னி நதி, 1(1), 11-12.

Abstract

மனிதனை தலைச்சிறந்தவனாக மாற்றுவது இலக்கியங்கள். பழந்தமிழர்கள் மக்கள் அறநெறியோடு வாழ்வதற்காகவே இலக்கியங்களைப் படைத்துள்ளனர். தமிழ் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் மனித குலத்தை இன்புறுத்தி அதன் வழியே அற ஒழுக்கத்தை உணர்த்தும் வலிமை உடையதாக விளக்குகிறது. மக்கள் ஆற்றிவு உடையவர்கள். இலக்கியங்கள் மனித வாழ்க்கையை இன்ன முறையில் தான் வாழ வேண்டும் என்ற முறையினை உணர்த்துகின்றன.

Literature is what makes a man great. Ancient Tamils created literature for people to live morally. Literature in the Tamil language is described as having the power to inspire humanity and thereby inculcate morality. People are energetic. Literature shows how human life should be lived.

கட்டுரைகள்

திருக்குறளில் உணவுப் பண்பாடு
Food Culture in Thirukkural

சு.வினோத்*
உதவிப் பேராசிரியர், இளநிலைத் தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
வினோத், சு. (2024). திருக்குறளில் உணவுப் பண்பாடு. பொன்னி நதி, 1(1), 13-16.

Abstract

வாழ்க்கை செயல்பாடுகளில் பெரும்பகுதி உணவுத் தேவையை நோக்கியே இயங்குவதைக் காணலாம். எனவே வாழ்க்கை குறித்து சிந்தித்த புலவர்களும் சிந்தனையாளர்களும் உணவு குறித்துப் பெரிதும் சிந்தித்துள்ளனர். அவ்வகையில் வள்ளுவம் என்னும் வாழ்வியல் நூலில் வள்ளுவர் உணவு குறித்துப் பலவாறாகச் சிந்தித்துள்ளார். திருக்குறளில் இடம்பெற்றுள்ள உணவு குறித்த மற்றும் உணவுப் பண்பாடு குறித்த சிந்தனைகளை இனம் காணும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

It can be seen that most of the activities of life are directed towards the need for food. So poets and thinkers who have thought about life have thought a lot about food. In this way Valluvar has thought about food in various ways in his biographical book Valluvam. This article aims to identify the thoughts on food and food culture in Thirukkural.

ஆய்வுக் கட்டுரைகள்

பன்னோக்கு பார்வையில் குறுந்தொகை
Kurunthogai in Perspective

மா. நிகிதா* , அ. பொன்னம்மாள்**
*முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் கலை ஆய்வகம், தெ. தி இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
**இணைப் பேராசிரியர், தமிழ் கலை ஆய்வகம், தெ. தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
நிகிதா, மா., மற்றும் பொன்னம்மாள், அ. (2024). பன்னோக்கு பார்வையில் குறுந்தொகை. பொன்னி நதி, 1(1), 17-20.

Abstract

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்பதிலேயே தமிழ் மொழியின் தொன்மைத் தன்மை விளங்குகிறது. தமிழில் காணப்படும் இலக்கியங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது சங்க இலக்கியம். இதன் மூலமே பழந்தமிழரின் நுட்பமான வாழ்வியல் கூறுகள் குறித்து நாம் அறிய முடிகிறது.  சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூலான குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களை உள்ளடக்கியது.  சங்க கால காதல் உணர்வுகள் குறித்த குறுந்தொகையில் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  அகப் பொருளினூடே ஐந்திணைகளின் ஒழுகலாறுகள்,   இயற்கை காட்சிகள் நிரம்பப் பெற்றனவாக நம் மனம் நெகிழ்வதை உணரலாம். குறுந்தொகையில் காணப்படும் அகவாழ்வு சார்ந்த காதல், திருமணம், விருந்தோம்பல், நம்பிக்கைகள் குறித்த செய்திகளையும் மற்றும் இசை, உடை, தொழில் சார்ந்த பதிவுகளை எடுத்துரைப்பதை இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

The archaic character of Tamil language can be seen in the saying 'Kal Thondri Man Thondra Kalathey Vazhodu Mun Thondriya Mootha Kudi'. Among the literary works found in Tamil, Sangam literature holds a very special place. Through this, we can understand the intricate aspects of the ancient Tamil way of life. "Kurunthogai," one of the eight anthologies of Sangam literature, contains poems related to love. The love emotions of the Sangam era are beautifully depicted in "Kurunthogai." Through the internal themes, we can feel the ethics of the five landscapes, the scenes of nature, and how they touch our hearts. The objective of this article is to explain the messages related to love, marriage, hospitality, and beliefs found in "Kurunthogai," as well as the records related to music, clothing, and professions.

ஆய்வுக் கட்டுரைகள்

பரிபாடல் உணர்த்தும் இசையொலிகள்
The Musical Sounds Conveyed by Paripadal

சு. ராஜஸ்ரீ* , ஆ. ஆன்றோ பீற்றர்**, நா. ஐயப்பன்***
*முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தெ. தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில் - 2.
**உதவிப் பேராசிரியர், பயோனியர் குமாரசுவாமிக் கல்லூரி, நாகர்கோவில். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி – 627012.
***இணைப் பேராசிரியர், தமிழ்க்கலை ஆய்வகம், தெ. தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
ராஜஸ்ரீ, சு., பீற்றர், ஆ. ஆ., மற்றும் ஐயப்பன், நா. (2024). பரிபாடல் உணர்த்தும் இசையொலிகள். பொன்னி நதி, 1(1), 21-27.

Abstract

இவ்வுலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒலிகள் பல ஒலிக்கின்றன. அவ்வொலிகள் ஒவ்வொன்றும் கேட்போர் உள்ளங்களில் இனிய இசையாக ஒலிப்பதில்லை. ஒரு சில ஒலிகள் மட்டுமே இனி ஒலியாக, மனதைக் கொள்ளைக் கொள்ளும் இனிய கானமாக, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சங்கீத தூரலாக ஒலிக்கின்றன. அவற்றுள் எட்டுத்தொகையில் ஒன்றாகியப் பரிபாடல் இசைத் தமிழ்ப் பாடல்களைக் கொண்ட நூலாகும். பரிபாடலில் ஒலிக்கும் ஒலிகள் (இசைகள்) கேட்பவர் அனைவரது உள்ளங்களையும் கொள்ளைக் கொள்கின்றது. அத்தகைய ஒலிகள், பரிபாடலில் எவ்வாறு இசை ஒலிகளாக மிளிர்கின்றன என்பது குறித்தும், அத்தகைய ஒலிகள் மேகங்களின் இடையில் முழங்கும் முழக்கங்கள் குறித்தும் , குழலிசை, குரலிசை, யாழிசை, மற்றும் முரசு இவைப்போன்ற இசையொலிகள் அனைத்தும் இவ்வாய்வுக் கட்டுரையை அமைக்க உதவியுள்ளன.

In this world, in all parts, there are many sounds echoing. These sounds are not merely pleasant music in the ears of listeners. Some sounds, transforming into melodies that captivate the mind, suppress emotions, and express the essence of music, reverberate as musical threads. Among them, as one of the eight collections (Ettuthogai), there exists a book named 'Paripaadal' containing Tamil songs. The sounds (musical notes) in these songs resonate with the depths of everyone's emotions. Such sounds, and how they manifest as musical notes in songs about the various melodies between clouds, rhythms, tunes, and beats contributed to the creation of this research paper.

ஆய்வுக் கட்டுரைகள்

பெரியபுராணம் காட்டும் விருந்தோம்பல்
Hospitality Portrayed in Periyapuranam

ச. சிவரக் ஷவி *
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641 029.
சிவரக் ஷவி, ச. (2024). பெரியபுராணம் காட்டும் விருந்தோம்பல். பொன்னி நதி, 1(1), 28-32.

Abstract

முன்னோர்கள் தமது வீட்டிற்கு வந்த விருந்தினர்களின் உபசரிப்பினைக் குறைவின்றிச் செவ்வனே செய்து அவர்கள் வேண்டியதை வேண்டியவாரே கொடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். அவ்வாறாகச் சேக்கிழார் அருளித்தந்த திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாயன்மார்களின் விருந்தோம்பல் பண்பினைச் சுருக்கமாக இவ்வாய்வு எடுத்தியம்புகிறது.

The forefathers consistently welcomed and entertained guests who visited their homes, ensuring they were provided with everything they needed. In this way, this review takes a brief look at the hospitality of the Nayanmars as mentioned in the Periyapuranam called Thiruthonda Puranam, which was blessed by Sekizhar.

ஆய்வுக் கட்டுரைகள்

திருக்கோவையாரில் அறத்தொடு நிற்றல்
Arathodu Nittral in Thirukkovaiyar

பா. செ. சுடர்விழி*
முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்), அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி.
சுடர்விழி, பா. செ. (2024). திருக்கோவையாரில் அறத்தொடு நிற்றல். பொன்னி நதி, 1(1), 33-35.

Abstract

சங்ககாலம் முதல் மக்களிடையே ஒழுக்கம், அறம் என்பது வலிந்து பின்பற்றக்கூடிய ஒன்றாக இருந்துள்ளது. இன்றையகால மக்களும் அறஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்கள் எனில் அதற்கு அடிப்படையாக இருப்பவை தமிழ் இலக்கியங்கள் ஆகும். அறம் என்பதற்கு உண்மையைக் கூறுதல் என்று பொருள். தமிழில் அக இலக்கியத்தில் களவு ஒழுக்கத்தை மேற்கொள்ளும் தலைமக்கள் தங்கள் காதலை உற்றாருக்கு தெரிவிப்பதே அறத்தொடு நிற்றல் எனப்படுகிறது. அறத்தொடு நிற்றல் குறித்து அகப்பொருள் இலக்கணங்கள் வரையறை வகுத்துள்ளன. திருக்கோவையார் காட்டும் அறத்தொடு நிற்றல் துறை குறித்து ஆய்வதாகவே இவ்ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.

Morality and virtue have been principles that people have followed since the Sangam era. If people today also follow morality, its basis lies in Tamil literature. Virtue, defined as telling the truth, is known internally in Tamil literature as "Arathodu Nittral." Leaders who practice morality convey their love to their families through this principle. This research paper explores the concept of "Arathodu Nittral" as exemplified by Thirukkovaiyar.

ஆய்வுக் கட்டுரைகள்

தெய்வத்தின் குரலில் விநாயகர் வழிபாடு
Vinayagar Worship in the Voice of God

கெளசல்யா செ.* , க. நாகேஸ்வரி**
*பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் தெ.தி.இந்துக் கல்லூரி, நாகர்கோவில். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் , அபி‌ஷேகப்பட்டி, திருநெல்வேலி.
**தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியை, தெ.தி. இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.
கெளசல்யா, செ. மற்றும் நாகேஸ்வரி, க. (2024). தெய்வத்தின் குரலில் விநாயகர் வழிபாடு. பொன்னி நதி, 1(1), 36-37.

Abstract

தெய்வத்தின் குரலில் விநாயகர் வழிபாடு என்ற நோக்கில் இக்கட்டுரை எழுதப்பெற்றது விநாயகர் வழிபாடு, சனாதன தர்மத்தின் அடிப்படை வழிபாடு என்பதாலும் எச்செயலிலும் ஆனைமுகன் வழிபாட்டிற்குப் பின்பே செயல்படுத்தப்படும் என்பதாலும் தெய்வத்தின் குரலில் ஏழு இயல்களிலும் விநாயகர் பற்றி ஆசிரியர் கூறிய கருத்துக்களைத் தொகுத்து இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

This article has been written with the aim of expressing Ganesha worship in the voice of the deity. Since Ganesha worship is fundamental to Sanatana Dharma, and any action is traditionally commenced only after worshipping Aanaimughan, the author's reflections on Ganesha in the deity's voice have been compiled in this article.