'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்பதிலேயே தமிழ் மொழியின் தொன்மைத் தன்மை விளங்குகிறது. தமிழில் காணப்படும் இலக்கியங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது சங்க இலக்கியம். இதன் மூலமே பழந்தமிழரின் நுட்பமான வாழ்வியல் கூறுகள் குறித்து நாம் அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூலான குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களை உள்ளடக்கியது. சங்க கால காதல் உணர்வுகள் குறித்த குறுந்தொகையில் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அகப் பொருளினூடே ஐந்திணைகளின் ஒழுகலாறுகள், இயற்கை காட்சிகள் நிரம்பப் பெற்றனவாக நம் மனம் நெகிழ்வதை உணரலாம். குறுந்தொகையில் காணப்படும் அகவாழ்வு சார்ந்த காதல், திருமணம், விருந்தோம்பல், நம்பிக்கைகள் குறித்த செய்திகளையும் மற்றும் இசை, உடை, தொழில் சார்ந்த பதிவுகளை எடுத்துரைப்பதை இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
The archaic character of Tamil language can be seen in the saying 'Kal Thondri Man Thondra Kalathey Vazhodu Mun Thondriya Mootha Kudi'. Among the literary works found in Tamil, Sangam literature holds a very special place. Through this, we can understand the intricate aspects of the ancient Tamil way of life. "Kurunthogai," one of the eight anthologies of Sangam literature, contains poems related to love. The love emotions of the Sangam era are beautifully depicted in "Kurunthogai." Through the internal themes, we can feel the ethics of the five landscapes, the scenes of nature, and how they touch our hearts. The objective of this article is to explain the messages related to love, marriage, hospitality, and beliefs found in "Kurunthogai," as well as the records related to music, clothing, and professions.