தமிழில் தோன்றிய காப்பியங்களில் சிறப்பும் பெருமையும் பெற்ற நூலாகக் கம்பராமாயணம் திகழ்கின்றது. விருத்தம் என்னும் ஒண்பாவில் இராமகாதையைப் படைத்தளித்த கம்பனைப் போல கொங்குநாட்டில் தோன்றிய எம்பெருமான் கவிராயர் என்னும் புலவர் தக்கை என்னும் இசைக் கருவியை இசைத்துப் பாடும் வகையில் இராமாயணத்தை இயற்றியுள்ளார். இந்நூல் தக்கைராமாயணம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கம்பராமாயணத்தை ஆழ்ந்து பயின்று, நினைத்து நினைத்து உருகித் திளைத்ததால் விளைந்த பரவசத்தை, இன்ப அனுபவத்தைப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் நாட்டுப் பாடல்களாய் மாற்றிக் கொடுத்துள்ளார் எம்பெருமான் கவிராயர் என்பார். இவ்விரண்டு நூல்களின் பாடுபொருள் ஒன்றாகவே இருப்பினும் பல இடங்களில் கம்பரைத் தழுவியும் சில இடங்களில் கம்பராமாயணத்திலிருந்து வேறுபட்டும் தக்கைராமாயணத்தை எம்பெருமான் கவிராயர் பாடியுள்ளார். அவ்வகையில் எம்பெருமானார் ஒத்தும் வேறுபட்டும் செல்லும் இடங்களை ஆய்ந்துரைக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
"Kamba Ramayanam" is one of the most famous books in Tamil literature. Emperuman Kavirayar, who appeared in Kongunadu like Kampan, composed the Ramayana in a poetic form known as "Virutham," intended to be sung accompanied by a musical instrument called Bulavar Takkai. This version is famously known as "Thakai Ramayanam." Emperuman Kavirayar translated the ecstasy and joy of the Kamba Ramayanam into folk songs so that even the common man could comprehend it. Thakai Ramayanam differs from Kamba Ramayanam in various aspects. This article aims to explore both the similarities and differences in the narrative where Emperumanar diverges from Kampan's work.