நற்றாயின் உடல்நலம் பேணுவதிலும், பாலூட்டும் கால கட்டத்திலும் தாய்ப்பாலைத் தவிர்க்க வேண்டியும், குழந்தையைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டிய சூழ்நிலையிலும் இவற்றில் ஒன்றின் காரணமாய் வளர்ப்புத்தாய் முறை ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் வளர்ப்புத்தாய்க்கும் குழந்தைக்கும் அதிக நெருக்கம் உண்டானதால் இலக்கண நூலாசிரியர்கள் 'செவிலி' என்னும் சொல்லைத் தாயுடன் இணைத்துக் கொண்டனர். செவிலி தலைவியை வளர்ப்பதில் அன்பையும், கடமையுணர்ச்சியையும் செவிலித்தாய் காட்டுகிறாள். ஐந்திலக்கண நூல்கள் மற்றும் சங்க இலக்கியங்களிலும் செவிலித்தாய் குறித்த செய்திகள் பற்றிய குறிப்புகளை இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகின்றது.
In Sangam literature, the term 'Sevili' refers to a woman who serves as a confidante and advisor to the heroine, known as 'Thalaivi'. The Sevili plays a crucial role in guiding the heroine through various emotional and social situations, often providing counsel and support. The relationship between the heroine and the Sevili is characterized by deep trust and intimacy. The Sevili is privy to the heroine's innermost feelings and secrets, and her advice is highly valued. This dynamic is evident in several Sangam texts, where the Sevili's counsel significantly influences the heroine's decisions and actions.