சமூக வரலாற்றையும் மொழி வரலாற்றையும் அறிய இலக்கியங்கள் பயன்படுகின்றன. மொழியின் இலக்கண ஒழுங்கை அறிய இலக்கணங்கள் பயன்படுகின்றன. அதுபோல சொற்பொருளை அறிய உதவும் அகராதிகள், இவ்விரண்டையும் விளக்கிக் கொள்வதற்கான கருவிநூல்களாகச் செயல்படுகின்றன. வா. மார்க்கசகாயஞ் செட்டியார் தொடங்கி (1924), ச.வே. சுப்பிரமணியன் (2007) வரை பன்னிரண்டு திருக்குறள் அகராதிகள் வெளிவந்துள்ளன. அவ்வகராதிகளில் மெய் குறித்து 11 இடங்களிலும், வாய் குறித்து 5 இடங்களிலும், கண் குறித்து 73 இடங்களிலும், மூக்கு குறித்து 3 இடங்களிலும், செவி குறித்து 11 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் ஐம்புலன்கள் குறித்து 103 இடங்களில் 12 திருக்குறள் அகராதிகளில் இடம்பெற்றுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் ஆராயப்பட்டுள்ளது.
Literary works serve as valuable tools for understanding both social and linguistic histories. Grammar texts help in comprehending the structure of a language, while dictionaries assist in grasping word meanings. In this context, Thirukkural dictionaries have been instrumental in elucidating the significance of sensory organs in Tamil literature. Since the publication of the first Thirukkural dictionary by V. Markkachakayan Chettiar in 1924, and up to the work of S. V. Subramanian in 2007, twelve Thirukkural dictionaries have been released. These dictionaries have highlighted the importance of sensory organs in Thirukkural, with references to body appearing 11 times, mouth 5 times, eye 73 times, nose 3 times, and ear 11 times. In total, all five senses are mentioned 103 times across these twelve Thirukkural dictionaries.