சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலில் விழாக்கள்
Festivals in the Life of Sangam Tamils

பா. செல்வகுமரன்*, கா. உமாராஜ்**
*-** மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை- 21, தமிழ்நாடு.
Periodicity:July - December'2024

Abstract

சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் மக்கள் சிறுசிறு குடிகளாக வாழ்ந்தபோது விழாக்கள் நடைபெற்றிருக்க வேண்டும். அதுபற்றி தொல் பழங்கால ஒவியங்களில் சில காட்சிகள் வரையப்பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் கூறப்பெறும் குரவைக்கூத்து, வரிக்கூத்து, நடனங்கள், தொல் பழங்கால ஓவியத்தில் வரையப்பெற்று காணப்படுகின்றது. இவை பற்றிய கருத்துக்களை வெறும் யூகமாகக் கொள்ள முடியுமே தவிர, உறுதியான கருத்துக்களாகக் கொள்ள இயலாது. விழா என்பது ஓர் ஆண்டின் சமூக வாழ்வின் உச்சகட்ட வெளிப்பாடு, அல்லது சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய விழாவிற்குப் பின் ஏற்பட்டுள்ள சமூக, சமய வாழ்வுக்கான உச்சகட்ட வெளிப்பாடு, அல்லது எப்போதும் இல்லாத அளவிற்குச் சமூக வாழ்க்கையில் ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடியைச் சமாளிக்க உருவான கூட்டு நடவடிக்கையின் வெளிப்பாடே விழாவாகும். மனிதனின் வாழ்க்கைச் சுழற்சியில் பிறப்பு, இறப்பு போன்ற மிகப்பெரும் தனி மனித நெருக்கடியைச் சமாளிக்கச் செய்யும் செயலே சடங்காகும். சமூகத்தில் நெருக்கடி வரும்போதெல்லாம் கூட்டு வாழ்க்கையைப் புதுப்பிப்பதே விழா என கூறப்படுகின்றது.

சங்ககாலத்தில் பல விழாக்கள் நடைபெற்றன. அவற்றில் சில தேசிய விழாக்கள்; பல உள்ளூர் விழாக்கள். பொதுவாக விழவு என்றும், விழா என்றும் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் போது அவற்றை சிறு குடிவிழாக்காளாகவே கொள்ள முடிகின்றது. விழா என்று பொதுவாகக் கூறும்போது அன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவைக் குறிப்பிடவில்லை. விழித்திருந்து பார்த்தால் விழா என்று பெயர் பெற்றது என்பர். விழாக்கள் பெரும்பாலும் நிறைமதி நாளிலே கொண்டாப்பட்டது. விழா நேரத்தில் மக்கள் உறங்காமலிருந்தனர். மேலும் நீர் விழா, முந்நீர் விழா, பூந்தொடை விழா, உள்ளி விழா, பங்குனி முயக்கம், நெடுவேள் விழா, திருமால் விழா, காமவேள் விழா, இந்திர விழா, ஓண விழா, சுடர் விழா, வேனில் விழா (பல் பூவிழா) எனப் பல விழாக்கள் சங்க காலத்தமிழர்களின் வாழ்வியலைப் வெளிப்படுத்துவதாக அமைகின்றது. அவ்விழாக்களின் மூலம் சங்ககால மக்களின் சிறப்பான வாழ்வியல் கூறுகளைப் பற்றி விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

In ancient times, when people lived in small communities, festivals were likely held to mark significant events. Evidence of such celebrations can be found in ancient cave paintings depicting various scenes. Sangam literature references dances like Kuravai Koothu and Vari Koothu, which are also illustrated in these ancient artworks. While interpretations of these depictions are often speculative, they provide insights into early cultural practices. A festival represents the pinnacle of a community's social life, reflecting either the culmination of annual societal and religious activities or a collective response to significant social crises. In an individual's life, rituals associated with major events like birth and death serve to manage personal transitions. Similarly, in society, festivals function as communal activities designed to renew and revitalize collective life, especially during times of stress or change.

During the Sangam period, numerous festivals were celebrated, encompassing both regional and local events. In Sangam literature, terms like “vizhavu” and “vizha” often refer to small community festivals. The term “vizha” does not denote a specific grand festival of that era in Tamil Nadu. It is said that people remained awake during festivals, and many were held on full moon days. The festivals mentioned—Neer Vizha, Munneer Vizha, Poontodai Vizha, Ulli Vizha, Pankuni Muyakkam, Neduveal Vizha, Tirumaal Vizha, Kaamaveal Vizha, Indira Vizha, Ona Vizha, Sudar Vizha, and Venil Vizha (Pal Poovizha)—reflect the cultural and social life of the Sangam-era Tamils. This paper describes the unique lifestyle elements of the Sangam period people through these festivals.

Keywords

சங்க காலம், விழா, தமிழர்கள், வாழ்வியல், பண்பாடு.

How to Cite this Article?

செல்வகுமரன், பா., மற்றும் உமாராஜ், கா. (2024). சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலில் விழாக்கள். பொன்னி நதி, 1(2), 21-25.

References

1. வையாபுரிப் பிள்ளை, எஸ்.1967, “சங்க இலக்கியம்”, பாரி நிலையம், சென்னை.
2. நடன.காசிநாதன், 1993, “திங்கள் தோறும் திருவிழா” தொல்லியல் நோக்கில், பக்.102-110.
3. சண்முகம் பிள்ளை.மு, (ப.ஆ) 1997, “சங்கத் தமிழர் வாழ்வியல்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
4. தமிழ் வேலனார், 1999, “மதுரைக் காஞ்சி ஓர் அறிமுகம்”, தமிழ் வேலன் பதிப்பகம், திருவாரூர்.
5. சிற்பி பாலசுப்பிரமணியம், நீல பத்மநாபன், 2014, “புதிய தமிழ் இலக்கிய வரலாறு”, சாகித்திய அகாதெமி, புது தில்லி.
6. முனைவர்.அ.தட்சிணாமூர்த்தி, 2019, “தமிழர் நாகரிகமும் பண்பாடும்”, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
7. திருமுருகாற்றுப்படை, வரி,258 “தொல்காப்பியம்,” புறத்திணையியல், நூற்பா, 5
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.